ஜகதாபி குரங்கு பட்டறை

அமைவிடம் - ஜகதாபி குரங்கு பட்டறை
ஊர் - ஜகதாபி
வட்டம் - தாந்தோணி
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கரூர் தாந்தோனி வட்டாரத்தில் அமைந்துள்ள அஞ்சூர் கிராமத்தின் பரந்த நிலப்பரப்பில் கல்வட்டங்களும், குத்துக்கற்களும் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டறியப்பட்டு வெளிக்கொணரப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான கல்வட்டங்களும், சுமார் 5-க்கும் மேற்பட்ட குத்துக்கற்கள் எனப்படும் இறந்தோர் நினைவாக நாட்டப்பட்ட வீரக்கற்களும் காணப்படுகின்றன. இந்த குத்துக்கற்களில் எழுத்தமைதியோ, உருவமைதியோ காணப்படவில்லை. ஒரு சில குத்துக்கற்கள் உடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இவ்வூர் பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சி நிலையைக் காட்டி நிற்கின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

ஜெகதாபி என்ற கிராமம் கரூர் மாவட்டத்தில், தாந்தோனி வட்டாரத்தில், கரூருக்கு தெற்கே சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிற்றூராகும். 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இவ்விடத்தில் காணப்படுகின்றன. உள்ளூர் மக்களால் குரங்கு பட்டறை என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது.